அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு


அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
x

தேய்பிறை பஞ்சமியையொட்டி கெரகோடஅள்ளியில் அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து தேய்பிறை பஞ்சமி யாகம் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். கெரகோட


Next Story