தேவி கருமாரியம்மன் பூப்பல்லக்கு ஊர்வலம்


தேவி கருமாரியம்மன் பூப்பல்லக்கு ஊர்வலம்
x

வேலப்பாடி சேர்வை முனிசாமி நகர் தேவி கருமாரியம்மன் பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.

வேலூர்

வேலூர் வேலப்பாடி சேர்வை முனிசாமி நகர் விநாயகம் சாலையில், அரசன் வேம்பு மேடையில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மனுக்கு 14-ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. நேற்று காலை அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம், பூ கரகம், தாரை தப்பட்டை, கெட்டி மேளம் முழங்க, உற்சவர் தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூப்பல்லக்கு திருவீதி உலா நடந்தது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தலும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.

சிறப்பு விருந்தினராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பூப்பல்லக்கு ஊர்வலத்தை சரவணமூர்த்தி முதலியார், முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி, கவுன்சிலர்கள் எழிலரசன், அஸ்மிதாகோபிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பூப்பல்லக்கு ஊர்வல ஏற்பாடுகளை மண்டி டி.ஜெயபிரகாஷ் மற்றும் விழா அமைப்பாளர்கள் கோபிநாதன், டாக்டர் பிரகாஷ் அய்யப்பன், மண்டி ரமேஷ்பாபு, சத்யநாராயணன், சரத், ஆறுமுகம், ரஜினிகாந்த் மற்றும் பேட்டை வாசிகள் செய்திருந்தனர்.


Next Story