பெரியபகவதி அம்மன் கோவில் திருவிழா


பெரியபகவதி அம்மன் கோவில் திருவிழா
x

வாங்கப்பாளையம் பெரியபகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கரூர்

வாங்கப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக கோவில் முன்பு உள்ள இரட்டை கிணற்று மேட்டில் இருந்து கோவிலுக்கு கிகரகம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு புனிதநீரால் நீராடப்பட்டு, மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 2-ம் நாள் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து மாவிளக்கு பூஜைகள் நடந்தது. 3-ம் நாள் கிடா வெட்டு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. ெதாடர்ந்து கோவிலில் வைக்கப்பட்ட கிகரகம் எடுத்து சென்று கிணற்றில் விடப்பட்டதுடன் திருவிழா நிறைவு பெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story