பழைய இரும்பு கடைக்கு செல்லும் நெசவு எந்திரங்கள்


பழைய இரும்பு கடைக்கு செல்லும் நெசவு எந்திரங்கள்
x

நெசவுத்தொழிலுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காததால் நெசவு எந்திரங்களை பழைய இரும்பு கடையில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

இரும்பு கடையில் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், சம்பத்ராயன் பேட்டை, நெல்லூர் பேட்டை, நாகவேடு போன்ற பல கிராமங்களில் காலம் காலமாக நெசவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் நெசவுத் தொழிலுக்கு தேவையான பாவு மற்றும் இதர பொருட்கள் முறையாக கிடைக்கப்பெறாததும், நூல் விலை ஏற்றம் காரணமாகவும் அதை நம்பியே இருந்த பல நெசவுத் தொழிலாளர் குடும்பங்கள் நெசவுத் தறி மிஷின்களை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து விட்டு கூலி வேலை, சமையல், கட்டிட வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்த தொழில் இன்று படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக் கிறது. அதனை மீட்டெடுக்க அரசு சார்பில் விவசாயத்திற்கு மானிய விலையில் இடுபொருட்கள் மற்றும் எந்திரங்கள் வழங்குவது போல நெசவுத் தொழிலுக்கும் வழங்க வேண்டும் என நெசவுத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கதர் ஆடை அணிய வேண்டும்

மேலும் தமிழகத்தின் பாரம்பரிய கதர் ஆடையை அதிகமாக மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், அதற்குண்டான நடவடிக்கையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இப்பகுதி நெசவுத் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story