கோலப்போட்டி


கோலப்போட்டி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை இறகுசேரியில் கோலப்போட்டி நடைபெற்றது

சிவகங்கை

தேவகோட்டை,

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளைெயாட்டி தேவகோட்டை இறகுசேரியில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டு வண்ண கோலங்களை போட்டனர். முதல்பரிசு ஸ்ரீவர்சினிக்கும், இரண்டாம் பரிசு ராஜேஸ்வரிக்கும், மூன்றாம் பரிசு தனலட்சுமி, அழகு, ராக்கம்மாள் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகர் கிழக்கு தலைவர் சஞ்சய் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் அப்பச்சி சபாபதி பரிசு வழங்கினார். இதில் நகரமங்கலம் ஜமால், மாநில இலக்கிய அணி செயலாளர் காரை வி.சுவாமிநாதன், வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார், பனங்குளம் சுப்பிரமணியன், நகர் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த வீரமணி, வேலு, விக்னேஸ்வரன், செல்வம், பழனியப்பன், இறகுசேரி காசி, ஜெய்னுதீன் ரஜாக், கண்ணங்குடி வட்டாரத்தை சேர்ந்த களத்தூர் பழனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.



Next Story