உடுமலை அருகே பட்டப்பகலில் மருந்து கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை அருகே பட்டப்பகலில் மருந்து கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போடிப்பட்டி
உடுமலை அருகே பட்டப்பகலில் மருந்து கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மருந்து கடை உரிமையாளர்
உடுமலையை அடுத்த சின்னவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். சுகாதார ஆய்வாளராக பனி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கம் போல் காலையில் மருந்துக்கடைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி வீட்டை பூட்டி விட்டு மதுரையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்தநிலையில் நேற்று மதியம் சுபாஷ் சந்திர போசின் வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன.
நகை, பணம் திருட்டு
மேலும் பீரோவிலிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.