தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள்


தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள்
x

அலமேலுமங்காபுரம் அரசு பள்ளியில் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். வேலூர் எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அபிநயாவுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி மாதவி, பிளஸ்-1 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கிருத்திகா ஆகியோருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்களை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story