62 பவுன் நகைகள்-400 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை
மன்னார்குடியில் அரசு காண்டிராக்டர் வீட்டின் பூட்ைட உடைத்து 62 பவுன் நகைகள் மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அரசு காண்டிராக்டர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் புதிய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தரைதள வீட்டில் வசித்து வருபவர் ராமமூர்த்தி(வயது 42). அரசு காண்டிராக்டரான இவர் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பிய ராமமூர்த்தி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்று பார்த்தார். அப்போது கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
62 பவுன் நகைகள்-400 கிராம் வெள்ளி கொள்ளை
அப்போது வீட்டு்க்குள் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 62 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 8 பட்டுச் சேலைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
ராமமூர்த்தி வெளியூர் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவு அவரது வீட்டின் கொல்லைப்புற கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பட்டுச்சேலைகளை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நகைகள், வெள்ளி பொருட்கள், பட்டுச்சேலைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.அரசு காண்டிராக்டர் வீட்டில் நகைகள், வெள்ளி பொருட்கள், பட்டுசேலைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் மன்னார்குடி பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.