எல்.ஐ.சி. அதிகாரியின் மனைவியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சையில் எல்.ஐ.சி. அதிகாரி மனைவியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் எல்.ஐ.சி. அதிகாரி மனைவியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
எல்.ஐ.சி. அதிகாரி
தஞ்சை குழந்தையம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் எல்.ஐ.சி.யில் அதிகாரியாக உள்ளார். இவருடைய மனைவி சிவசங்கரி (வயது 28). சம்பவத்தன்று இவர் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தார்.
6 பவுன் சங்கிலி பறிப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசங்கிரி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். இதனால் சுதாரித்து கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் சிவசங்கரி புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.