கோவிலில் சாமி சிலையில் இருந்து 4 பவுன் சங்கிலி திருட்டு
ஒரத்தநாடு அருகே கோவிலில் சாமி சிலையில் இருந்து 4 பவுன் சங்கிலி திருட்டுப்போனது.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு;
ஒரத்தநாட்டை அடுத்துள்ள உறந்தைராயன்குடிக்காடு கிராமத்தில் பிரதான சாலை ஓரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு கோவிலின் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பத்ரகாளியம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 4 பவுன் சங்கிலியை திருடி சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story