கணவருடன் மோட்டார் சைக்கிளில் ெசன்றபெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
தக்கலை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்த சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தக்கலை:
தக்கலை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்த சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மருத்துவமனைக்கு சென்றவர்கள்
தக்கலை அருகே உள்ள மூலச்சல், வட்டியான்விளையை சேர்ந்தவர் ராஜபாண்டே. இவரது மனைவி பிரபிலா (வயது37), லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் மாலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பார்க்க சென்றனர். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் மூலச்சல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மணலி சந்திப்பில் இருந்து மூலச்சல் சாலைக்கு திரும்பிய போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த நிலையில் 2 மர்ம நபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
நகை பறிப்பு
மர்ம நபர்கள் திடீரென கணவரின் பின்னால் அமர்ந்திருந்த பிரபிலாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த பிரபிலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு தப்பி ெசன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு ெசய்து வருகிறார்கள்.