42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.312 உயர்வு..!


42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.312 உயர்வு..!
x

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் கானப்பட்டாலும், அவ்வபோது ஒரே அடியாக விலை அதிகரித்து உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சில நாட்களில் விலை குறைந்தாலும், பல நாட்களில் விலை அதிகரித்த வண்னம் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு விற்கப்படுகிறது.

அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story