தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!
x
தினத்தந்தி 3 Aug 2023 10:07 AM IST (Updated: 3 Aug 2023 11:12 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை 1.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story