சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து விற்பனை
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்தது.
சென்னை
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.308 உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்து 144-க்கு விற்றது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்தது. இதனால் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story