நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஜான் பாண்டியன் பிறந்தநாளையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான் பாண்டியன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகங்களை நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் வியங்கோ பாண்டியன் வழங்கினார். மேலும் மனக்காவலம்பிள்ளை நகரில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம், மாநகர பகுதிகளில் கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் கல்குறிச்சி சேகர், நெல்லை மாநகரச்செயலாளர் கோ.துரைப்பாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மாநகர இணைச் செயலாளர் சின்னத்துரை, பாளையங்கோட்டை ஒன்றிய இணைச்செயலாளர் பரமசிவ பாண்டியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், மோகன்மள்ளர், நாதன், செந்தில், முத்துவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.