1½ பவுன் நகை திருடியவர் கைது


1½ பவுன் நகை திருடியவர் கைது
x
தினத்தந்தி 6 July 2023 2:51 AM IST (Updated: 6 July 2023 5:26 PM IST)
t-max-icont-min-icon

விவசாயியை ஏமாற்றி அழைத்து சென்று 1½ பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது32), விவசாயி. இவர் சம்பவத்தன்று வெளியூருக்கு சென்று விட்டு ஊருக்கு வருவதற்காக பட்டுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவோணத்தை அடுத்துள்ள தோப்பநாயகம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் (42) என்பவர் கனகராஜிடம் நட்பாக பேசி அவரை நம்ப வைத்து மோட்டார் சைக்கிளில் அலிவலம் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது கனகராஜ் அவரது பர்சில் வைத்திருந்த 1½ பவுன் நகையை சித்திரவேல் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story