சென்னை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ஊழியர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - ஊழியர் கைது
x

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 43 லட்சத்தி 31 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது விமான நிலையத்தில் உள்ள வரி இல்லா பொருட்கள் விற்பனை கடை முன் நின்றிருந்த ஏர்- இந்தியா நிறுவன ஊழியாரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் தங்க பசைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 43 லட்சத்தி 41ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்.

மேலும் அவரிடம் விசாரித்த போது துபாயில் இருந்து சென்னை வந்த இலங்கை நாட்டை சேர்ந்த பயணி ஊழியரிடம் தந்து வெளியே கொண்டு வர சொல்லி விட்டு பையை தந்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை கைது செய்து தங்கத்தை தந்து விட்டு தப்பி சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story