உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் தி.மு.க.வினர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் தி.மு.க.வினர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மாநகர துணைச் செயலாளர்கள் மூளிக்குளம் பிரபு, சுதா மூர்த்தி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாழ்த்து
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக பொறுப்பேற்றதற்கும், அவரது பிறந்த நாளை முன்னிட்டும் அவரை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.