தாடாளன் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்


தாடாளன் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:


சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லோகநாயகிதாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார்.இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தங்க கருடசேவை நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,சாத்துமுறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி மகாதீபாராதனை காட்டப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குமார தொட்டாச்சாரியார் ஸ்வாமி, சீனிவாசாச்சாரியார் ஸ்வாமி, ஸ்ரீநாத் சுவாமி, பட்டாட்சியார் பத்ரிநாதன்,பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story