சவுரிராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை


சவுரிராஜ பெருமாள் கோவிலில்  கருடசேவை
x
தினத்தந்தி 10 Jun 2022 7:49 PM IST (Updated: 10 Jun 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் தங்க கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும்108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருட சேவை

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி, வருகிற 13-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story