தரமான விதைகள் அவசியம்


தரமான விதைகள் அவசியம்
x
திருப்பூர்

தரமான விதைகள் அவசியம்

முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முன்வர வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் கோ.வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கீழ்பவானி பாசன பகுதிகள்

முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.

விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தரமான விதைகள்

நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத் திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கு சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story