2023-ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


2023-ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
x

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கான நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

புதிய யுக்திகள், புதிய முயற்சிகள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாளுமை விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நல்லாளுமை விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதரவற்ற, கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக பிரிவு அமைத்து சிகிச்சை அளித்ததற்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜனுக்கு 2023ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட கலெட்க்டர் அருண் தம்புராஜ், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், கோவை எஸ்.பி. (புறநகர்) பத்ரி நாராயணன் ஆகியோருக்கும் நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு நாளை மறுதினம் சுதந்திர தின நிகழ்ச்சியின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுடன் ரூ.2 லட்சம் வெகுமதி வழங்குகிறார்.


Next Story