சரக்கு வேன் மோதி மோட்டார் சைக்கிள்கள் சேதம்


சரக்கு வேன் மோதி மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x

சரக்கு வேன் மோதி மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக தேங்காய் ஏற்றி வந்த சரக்கு வேன் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்று கீழே கிடந்ததால் அருகில் உள்ள கடைகளுக்குள் சரக்கு வேன் செல்லாமல் நின்றது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story