பட்டிவீரன்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வேன்


பட்டிவீரன்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வேன்
x

பட்டிவீரன்பட்டி அருகே தலைகுப்புற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல்

தேனி அருகே உள்ள முத்தனம்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 49). டிரைவரான இவர், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்து தேனி நோக்கி சரக்கு வாகனத்தில் தண்ணீர் டேங்கை ஏற்றி சென்றார்.

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சாலைப்புதூர் என்ற இடத்தில் அவர் வந்தபோது, சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனை கவனிக்காத தமிழரசன், லாரி மீது மோதுவது போல் சென்றார். உடனே சுதாரித்துகொண்ட தமிழரசன் லாரி மீது மோதாமல் இருக்க தனது வாகனத்தை சாலையோரமாக திருப்பினார்.

அப்போது அந்த சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தமிழரசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story