அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
x

மாதனூரில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மாதனூரில் புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி சார்பில் இளைஞர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் கோமதி தலைமை தாங்கினார். வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் 450 மாணவிகளும், 300 மாணவர்களும் அப்துல்கலாம் உருவபடத்தை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். ஊர்வல் கல்லூரியில் தொடங்கி முக்கிய கிராமங்கள் வழியாக வேப்பங்குப்பத்தை அடைந்தது.

ஊர்வலத்தில் போலீஸ் சப்-இன்பெக்டர்கள் கோவிந்தசாமி, பார்த்திபன், கல்லூரி பேராசிரியர்கள் விஸ்வநாதன், தீபா, கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story