அரசு பஸ் மோதி வாலிபர் பலி


அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x

முள்ளக்காட்டில் அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி, அருகே உள்ள முள்ளக்காட்டைச் சேர்ந்தவர் அருணாசலபாண்டியன். மதச்சார்பற்ற ஜனதா தள தூத்துக்குடி வட்டார தலைவராக இருந்து வருகிறார். இவரது மகன் சண்முகராஜ் (வயது 35). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று காலையில் அவரது வீட்டின் அருகே தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பஸ், சண்முகராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் நிலை குலைந்து மயங்கி கிடந்தார். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும்

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story