ஏற்காட்டில் அரசு பஸ் மோதி காட்டெருமை காயம்


ஏற்காட்டில்  அரசு பஸ் மோதி காட்டெருமை காயம்
x

ஏற்காட்டில் அரசு பஸ் மோதி காட்டெருமை காயம் அடைந்தது.

சேலம்

ஏற்காடு

ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. இதை செந்தில்குமார் ஓட்டி சென்றார். பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். தனியார் எஸ்டேட் அருகே பஸ் சென்றபோது, காட்டெருமை ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் நிலைதடுமாறிய பஸ் காட்டெருமை மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. மேலும் பஸ் மோதியதில் காட்டெருமை காயம் அடைந்தது. பின்னர் அது வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story