விஷம் குடித்து அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை
விஷம் குடித்து அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே பட்டரிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேக்கப்பென்சாம் (வயது50). இவர், திருவட்டார் அரசு பணிமனையில் கண்டக்டராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மேரிகலா (44) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஜேக்கப்பென்சாம் கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிபட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஜேக்கப்பென்சாம் விஷம் குடித்து குழியூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் இறந்து கிடந்தார். இதுபற்றி மேரிகலா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story