அரசு பஸ் கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி
அரசு பஸ் கண்டக்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்
சேலம் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டர். இவர் புதிய பஸ் நிலையத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி உடலில் தண்ணீர் ஊற்றினர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறும் போது, ஓய்வு கொடுக்காமல் அதிக பணிச்சுமை வழங்கப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். கலைச்செல்வனுக்கு அதிகம் பணிச்சுமை வழங்கியதால் தான் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story