பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்


பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்
x

பாவூர்சத்திரத்தில் நான்குவழி சாலைக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்- பயணிகள் காயமின்றி தப்பினர்

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை வழியாக ராமேசுவரம் செல்லும் அரசு பஸ் நேற்று காலையில் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி புறப்பட்டது. பாவூர்சத்திரம் - ஆலங்குளம் சாலையில் யூனியன் அலுவலகத்தை கடந்து பஸ் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட டிரைவர் மாடசாமி முயன்றார். அப்போது அந்த பகுதியில் நான்குவழி சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பஸ் இறங்கி சாய்ந்து நின்றது. டிரைவர் மாடசாமி சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

உடனடியாக அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டனர்.



Next Story