மாடாம்பூண்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் வசதி


மாடாம்பூண்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் வசதி
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாடாம்பூண்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் வசதியை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி பஸ் வசதி கேட்டு கடந்த 50 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பஸ் வசதி கேட்டு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அவர், இது குறித்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் மாடாம்பூண்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள், ஒன்றியக்குழு தலைவர்கள் அஞ்சலாட்சி அரசகுமார், வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், தொ.மு.ச. பேரவை தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி்.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மாடாம்பூண்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அய்யனார், எம்.ராஜேந்திரன், மணலூர்பேட்டை நகர செயலாளர் எம்.ஜெய்கணேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் துணைத் தலைவர் ஜம்பை பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.கே.ஆர் என்கிற ராஜீவ்காந்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் பாரதிதாசன், பெருமாள், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், வக்கீல்கள் ரவிச்சந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாபொன்முடி நன்றி கூறினார்.


Next Story