வாைழ தோட்டத்தில் சாய்ந்த அரசு பஸ்
வாைழ தோட்டத்தில் அரசு பஸ் சாய்ந்து நின்றது.
திருநெல்வேலி
ஏர்வாடி:
கன்னியாகுமரியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று பாபநாசத்திற்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு பஸ் டோனாவூர் வழியாக களக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
புலியூர்குறிச்சி அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டருக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்பினார். அப்போது பஸ் திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த வாழை தோட்டத்திற்குள் சாய்ந்து நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். எனினும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்ைல. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story