கேரளாவில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு அரசு பஸ் இயக்கம்


கேரளாவில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு அரசு பஸ் இயக்கம்
x

கேரளாவில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கேரள போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் விடப்பட்டுள்ளது. இந்த பஸ் கேரள மாநிலம் ஹரிபாடு என்ற இடத்தில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம், திருவனந்தபுரம், களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில், கூடங்குளம் வழியாக மதியம் 12.10 மணிக்கு ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு ஹரிபாடு சென்றடைகிறது.


Related Tags :
Next Story