ஆவடி அருகே டிராக்டர் மோதி அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது
ஆவடி அருகே டிராக்டர் மோதி அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது.
ஆவடி அருகே டிராக்டர் மோதி அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியதுஆவடியை அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி நேற்று காலை மாநகர பஸ்(தடம் எண் 61-கே) வந்துகொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 80 பேர் பயணம் செய்தனர். ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே வரும்போது திடீரென சாலையின் குறுக்கே எச்.வி.எப். நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்காக டிராக்டர் ஒன்று வந்தது.
அந்த டிராக்டரை ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அதில் சுமார் 4 தொழிலாளிகள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது மாநகர பஸ் மீது டிராக்டர் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. முன்பகுதியும் சேதம் அடைந்தது. விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த முனுசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.