தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி.ஒயர்களை துண்டித்தால் கடும் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. ஒயர்களை துண்டித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டி.வி. தாசில்தார் செல்வபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. ஒயர்களை துண்டித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டி.வி. தாசில்தார் செல்வபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு கேபிள்
தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம், அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு அரசு செட் டாப் பாக்ஸ் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஆத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு பி.எஸ்.என்.எல். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் அரசு சிக்னல் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் பழையகாயல் அருகே பி.எஸ்.என்.எல். ஓ.எப்.சி ஒயரில் அரசு சிக்னல் செல்லும் ஓ.எப்.சி. ஒயர் மட்டும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பகுதியில் அரசு கேபிள் ஒளிபரப்பு தடைபட்டது.
நடவடிக்கை
அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை முடக்கும் நோக்கத்திலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலும் சில தனியார் நிறுனங்களின் ஊழியர்கள் இந்த செயலை செய்து உள்ளனர்.
எனவே இது போன்ற தவறான செயலை யாரேனும் செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை அரசு கேபிள் டி.வி. தாசில்தார் செல்வபிரசாத் தெரிவித்து உள்ளார்.
----------------------