வள்ளிமலையில் அரசினர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்


வள்ளிமலையில் அரசினர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்
x

வள்ளிமலையில், அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர்

திருவலம்

வள்ளிமலையில், அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

குறை கேட்பு முகாம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை, திருவலம், வள்ளிமலை ஆகிய பகுதிகளில் மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கலை அறிவியல் கல்லூரி

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை கிராமத்தில் ஏற்கனவே உள்ள பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். வள்ளிமலை பகுதியில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில ஏதுவாக அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காட்பாடியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் கட்டப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, உதவி கலெக்டர் பூங்கொடி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன், தணிகாசலம், ரவி, திருவலம் பேரூராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி ரவி, பேரூராட்சி தி.மு.க. செயலாளர் நேரு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story