அரசு கல்லூரி மாணவர்கள் களப்பணி


அரசு கல்லூரி மாணவர்கள் களப்பணி
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சோழர்கால கோவில்களில் அரசு கல்லூரி மாணவர்கள் களப்பணி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறையை சேர்ந்த மாணவர்களுக்கு களப்பணியாக வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், விழுப்புரம் நகரத்தில் உள்ள சோழர்கால கோவில்களான ஆதிவாலீஸ்வரர் கோவில், வைகுண்டவாச பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில் ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்றார். அங்கு கோவில்களின் வரலாற்றையும், அதன் கட்டிடக்கலை பற்றியும், அங்குள்ள கல்வெட்டுகளை மைப்படிவம் எடுத்து எப்படி படிப்பது என்றும் செயல்முறையில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துரைத்தார்.

இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் கோவில்களை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தனர்.


Next Story