அரசு கல்லூரி தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு கல்லூரி தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள்   உள்ளிருப்பு போராட்டம்
x

3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து வேதாரண்யம் அரசு கல்லூரி தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து வேதாரண்யம் அரசு கல்லூரி தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள்

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1700 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த கல்லூரியில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் 44 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இந்த நிலையில் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story