அரசு ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் அதிகாரிகளை கண்டித்து அரசு ஒப்பந்ததாரர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் அதிகாரிகளை கண்டித்து அரசு ஒப்பந்ததாரர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் அலுவலகங்களுக்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிலுவையில் உள்ள வைப்புத் தொகையை வழங்க வேண்டும். மேலும் நடந்து முடிந்த பணிகளுக்கான தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த கோரிக்கைள் தொடர்பான விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஒன்றிய அலுவலக சுவரில் ஒட்டினர். இந்த போராட்டம் காரணமாக அரசு ஒப்பந்த பணிகள் அனைத்தும் முடங்கின.
Related Tags :
Next Story