அரசு டாக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு


அரசு டாக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

கல்லிடைக்குறிச்சியில் அரசு டாக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வசந்தகோகிலா. அரசு டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவுப்பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனடியாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், வீட்டில் பீரோவிலிருந்த 22 கிராம் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story