விழுப்புரம் மாவட்டத்தில்கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றிய அரசு டிரைவர்கள்


விழுப்புரம் மாவட்டத்தில்கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றிய அரசு டிரைவர்கள்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கோரிக்கை அட்டையை அணிந்து அரசு டிரைவர்கள் பணிசெய்தனா்.

விழுப்புரம்


15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும், அனைத்துத்துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணி செய்தனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர்.


Next Story