கார் விபத்தில் அரசு ஊழியர் பலி


கார் விபத்தில் அரசு ஊழியர் பலி
x

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் அரசு ஊழியர் பலி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள கருவூலத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

இவர் அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை திருப்பதியில் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலையை அடுத்த சத்திரம் அருகே வரும் போது கார் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த இரும்புத் தடுப்பில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் நவநீதகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த மற்றவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story