அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு கூட்டம்


அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு கூட்டம்
x

தூத்துக்குடியில் அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.

தூத்துக்குடி

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் அன்பரசு ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை பொதுச்செயலாளர் செல்வம் ஏற்றினார். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் சுபாஸ் லம்பா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். சி.ஐ.டி.யு. தேசிய செயலாளர் கருமலையான் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 27 மாநிலங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார். முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது. அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள 60 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு, அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி தமிழக முதல்வரின் கவனம் ஈர்க்கும் வகையில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story