மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

ஊட்டி

ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஜெயசீலன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உடனடியாக பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி சரண்டரை உடனே வழங்க வேண்டும். இந்த நிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதில் நிர்வாகிகள் தினகரன், ஜெயசீலன், அண்ணாதுரை, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story