அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கத்தினர் ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூரில் உள்ள ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய சாமுண்டீஸ்வரி வரவேற்றார். மாவட்டத்தலைவர் வெண்மதி முன்னிலை வகித்தார்.
இதில், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊர் நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் சுந்தர்ராஜன், மாநில தலைவர் சங்கர்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
பழைய ஓய்வூதியம்
கூட்டத்தில் சமூக நலத்துறையின் சத்துணவு பணிக்காலம் 50 சதவீதம் ஆசிரியர், ஜி.எஸ்,எம்.எஸ், சி.என்.ஐ, சி.என்.எஸ் ஆகியவை நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கிட்டு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையாளர் ரத்னா பரிந்துரைபடி குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம், அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 1-ந் தேதி சென்னை சமூக நலத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்க நிர்வாகிகள் சாந்தகுமாரி, மூர்த்தி, வளர்மதி, கலாவதி, உமாராணி, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.