13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா


13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
x

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்றுக்காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும், சத்துணவு,

அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் என தொகுப்பூதியம் பெறும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது வினியோக முறையை சீர்படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன போன்ற 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணா போராட்டம்

அந்த வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

இதில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அறிவழகன், மேகநாதன், அம்பிகாபதி, அரிகிருஷ்ணன், கீதா, பார்த்திபன், கேசவலு, வேங்கடபதி, கிருபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


Next Story