அரசு ஊழியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம்
அரசு ஊழியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகழூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் கருணாகரன் தொடக்க உரையாற்றினார். சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட துணைத்தலைவர் (டி.என்.ஜி.இ.ஏ.) குப்புசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் விஜயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். புகளூர், மண்மங்கலம் தாசில்தார்களை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.