அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்


அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
x

அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் 2 வட்ட கிளை சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு அதற்குரிய வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை வழங்கிட வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர், அங்கன்வாடி பணியாளர், எம்ஆர்பி செவிலியர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.'


Next Story