அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்


அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
x

அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.

கரூர்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் வட்டக்கிளை சார்பில் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிமியோன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சம்பத்குமார் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் செல்வராணி தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் மத்திய அரசு கடந்த 1.7.2022 முதல் அறிவித்து நிலுவைத் தொகையுடன் வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வினையும், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு ஊதியம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தினை ரத்து செய்து காலம் முறை ஊதியத்தினை வழங்கிட வேண்டும், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story