அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்றுவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், தனியார் மூலம் அரசுத்துறைகளில் பணி நியமனம் செய்யக்கூடாது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story